நாகர்கோவில் – செப்- 24,
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள அரசு மாணவியர்கள் விடுதியில் மாணவிகளுக்காக அரசு வழங்கி வரும் முட்டை, பருப்பு, அரிசி, சீனி உள்ளிட்ட உணவு பொருட்களை மாணவிகளுக்கு சமைத்து தராமல் அரசு மாணவிகள் விடுதி காப்பாளர் வீட்டுக்கு கொண்டு செல்வதாகவும். உண்ண உணவு முறையாகவும் சுத்தமாகவும் தரவில்லை என கூறி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு கல்லூரி மாணவிகள் புகார் மனு அளித்தனர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது . இந்த கல்லூரியில் குமரி மாவட்ட மாணவிகள் மட்டுமின்றி நெல்லை, தென்காசி, உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு சுசீந்திரம் அருகே அக்கரை பகுதியில் அமைந்துள்ள அரசு மாணவியர்கள் விடுதியில் தினசரி மூன்று நேரம் உணவு விடுதி சார்பில் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. திடீரென 50 க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்தனர் அவர்களின் மனுவில், அரசு மாணவியர்கள் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு தினசரி முறையாக உணவு தருவதில்லை அப்படியே தரும் உணவில் புழு பூச்சிகள் கிடப்பதாகவும், குடிக்க தண்ணீர் வசதி இல்லை. பாத்திரங்கள் சுத்தம் செய்வது இல்லை என்றும் அரசு வழங்கி வரும் முட்டை, பருப்பு, அரிசி, சீனி உள்ளிட்ட உணவு பொருட்களை எங்களுக்கு சமைத்து தராமல் விடுதி காப்பாளர் வசந்த லட்சுமியும் மற்ற ஊழியர்களும் அவரவர் வீடுகளுக்கு கொண்டு சென்று விடுவதாகவும், மாணவிகள் விடுதிக்கு வெளியில் இருந்து சம்பந்தமில்லாத ஆண்கள் வந்து செல்வதால் எங்களுக்கு பாதுகாப்பும் கேள்வி குறியாகி உள்ளதாகவும், எங்கள் உடல் நிலை மோசமானால் அரசு விடுதி அதிகாரிகள் தான் பொறுப்பு என மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.