ஈரோடு ஏப் 23
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட ரங்கம்பாளையம், ராஜாஜிபுரம் மற்றும் அம்பேத்கார்நகர் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா ஆரம்ப சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம் மற்றும் நகர்ப்புற நலவாழ்வு மையம் ஆகியவற்றின் கட்டுமான பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கம்பாளையம், மண்டலம் 4 பகுதியில் தேசிய சுகாதார நகர்ப்புற இயக்கம் கீழ் ரூ.120 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம், ராஜாஜிபுரம் பகுதியில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கூடுதல் கட்டிடம் மற்றும் அம்பேத்கார் நகர் வார்டு எண்.4 பகுதியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டப்பட்டு வருவதை நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை அரசு விதிமுறைகளுக்குட்பட்டு விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது ஈரோடு மாநகராட்சி ஆணையர் (பொ) தனலட்சுமி, மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, மாநகர நல அலுவலர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் ஆனந்தன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.