தென்தாமரைகுளம் மே 4
அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரியின் புதிய முதல்வராக பேராசிரியர் டி.சி. மகேஷ் மே 3-ம் தேதி பொறுப்பேற்றார்.
கல்வித்துறையில் கடந்த 25 ஆண்டுகளாக விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.
பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. எம்.சி. பாலன், விவேகானந்த கல்விக்கழக தலைவர் பாலமுருகன், செயலாளர் ராஜன்,, பொருளாளர் டாக்டர் ப்ரியதர்ஷினி,
வழக்கறிஞர்கள் சந்திரமோகன், மணி, டி.சி.கண்ணன், ஆதிமகாலிங்கம், பொறியாளர் ஆனந்த், இந்துக் கல்லூரி துணைத்தலைவர் கோபால், பள்ளி தாளாளர் கணேசன், முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புதிய முதல்வருக்கு கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர்.