கிருஷ்ணகிரி,ஆக.10- கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட நேரலகிரி ஊராட்சி, குருவி நாயனப்பள்ளி ஊராட்சி, ஐபிகாணப்பள்ளி ஊராட்சி, சிந்தகும்மாணப்பள்ளி ஊராட்சி ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட நேரலகிரி ஊராட்சியில் உள்ள சின்ன கொத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் ஒன்றிய கழகச் செயலாளர் டி.எஸ்.கருணாகரன் ஒன்றிய குழு பெருந்தலைவர் சரோஜினி பரசுராமன் தலைமையில்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கு.குமரேசன், பாப்பிபிரசன்னா ஆகியோர் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரலகிரி வீணா நந்தீஸ்வரன், குருவிநாயனப்பள்ளி ஸ்ரீனிவாசன், ஐபிகான பள்ளி பி. நஞ்சுண்டப்பா, சிந்தகும்மனப்பள்ளி எம்.முருகன், ஒன்றிய குழு உறுப்பினர் தனஞ்செயம், நேரலகிரி ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜலு, ஐபிகாணபள்ளி ஊராட்சி செயலாளர் முனிராஜ், குருவிநாயகனப்பள்ளி ஊராட்சி செயலாளர் நாராயணன், சிந்தகும்மணப்பள்ளி ஊராட்சி செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் கணினியில் பதிவிறக்கம் செய்து 30 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும் என பொதுமக்களுக்கு கூறினர்.