தென்தாமரைகுளம்., ஜன. 14. அஞ்சுகிராமத்தை அடுத்த லெவஞ்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் கேப் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழாவானது கல்லூரியின் இயக்குனர் கிருஷ்ணபிள்ளை வழிகாட்டலின் படி, இணை இயக்குநர் அய்யப்ப கார்த்திக் தலைமையில், கல்லூரியின் நிர்வாக அதிகாரி ஜெ. பி. ரெனின் மற்றும் கல்லூரியின் முதல்வர் டாக்டர் தேவ் ஆர்.நியூலின் ஆகியோரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் டாக்டர்.நாகேந்திரன் கலந்துகொண்டார்.மேலும்,கவுரவ விருந்தினர்களாக மகாகவி பாரதி கல்லூரியின் முதல்வர் டாக்டர் செல்வராஜ், கரிஷ்மா,முருகதாஸ், ஸ்கவுட் மாஸ்டர் அலாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.பொங்கல் வைத்தல்,ரங்கோலி, உறியடி,வடம் இழுத்தல், மியூசிக்கல் சேர் போன்ற பல வகையான போட்டிகள் நடைபெற்றது.நடனம், பாடல்,சிலம்பாட்டம், தீயாட்டம் போன்ற பலவகையான கலை நிகழ்ச்சிகள் மாணவர்களால் நிகழ்த்தி காட்டப்பட்டது.விழாவில்,விவசாயம் மற்றும் அழிந்து வரும் பலவகையான அரிசியின் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.பின்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியினை
ஆசிரியர்கள் ரவிகுமார், காயத்ரி, ஜெர்லா,அயரின் ஷில்பா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.