திருப்பூர் ஏப்ரல்: 22
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 17 சின்ன பொம்மநாயக்கன்பாளையம் நான்கு முக்கு ரோடு முதல் சுடுகாடு வரை சாக்கடை மிகவும் பழுதடைந்து 20 அடி அகலத்திற்கு ரோட்டிற்கு வந்து விட்டதால் இந்த சாக்கடையை சீரமைத்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம் மற்றும் சின்ன பொம்மநாயக்கன்பாளையம் கிழக்குப் பகுதியில் மழைக்காலங்களில் மழை நீர் வீடுகளுக்குள் சென்று விடுகிறது சின்ன பொம்மநாயக்கன்பாளையம் கிழக்கிருந்து மேற்கே சாக்கடை அமைத்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம் மற்றும் ஸ்ரீநகர் சாக்கடை அமைத்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் ஸ்ரீநகர் சாக்கடை சாலையையும் அமைத்துத் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
17 வது வார்டு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் இப்படிக்கு அதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கசாமி. திமுக கவுன்சிலர் காந்தி.திமுக வட்ட கழக செயலாளர் ஜானகிராமன், ஊர் முக்கியஸ்தர்கள் கிருஷ்ணசாமி.பழனிசாமி.கனகராஜ். மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.