சானாங்குப்பம் பகுதியில்
செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
திருப்பத்தூர்:ஜன:28, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சானாங்குப்பம் கண்ணதாசன் நகர் பகுதியில் சுமார் 500 கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது
இந்த பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி செயல்பட்டு வருகின்றது
இதனைத் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தனியார் செல்போன் டவர் அமைக்க கூடாது என ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
செல்போன் டவர் அமைப்பதால் அதிலிருந்து வெளியேறும் கதிர் வீச்சுகளால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என 2000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே எங்கள் பகுதியில் செல்போன் டவர் வேண்டாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்
மேலும் கண்ணதாசன் நகர் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகள் ஆன சாலை தெரு விளக்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் எனவும் மனு அளித்தனர்.