நாகர்கோவில் – ஜூலை – 23,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தென்மண்டல செயலாளர் பேச்சிமணி பாண்டியன் தலைமையில் நேற்று மக்கள் மனுநீதி குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் . அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையார், இணைந்த முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என்ற பெயரில் அழைப்பது தொடர்பாக கடந்த 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்ப்படுத்தபட்டோர் மற்றும் மிகவும் பிற்ப்படுத்தபட்டோர் ஆணையத்தால் அரசானண வெளியிட்டும் தமிழக அரசு அமல் படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது .
தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 23% பேர் தேவர் சமுதாயத்தினர் உள்ளனர் – இந்த சமுதாயத்திலும் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக மக்கள் பின் தங்கி உள்ளனர் . தற்போது இது சம்பந்தமாக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. நீதி மன்றம் தமிழக அரசு பதிலளிக்க கோரி உள்ளது . எனவே ஆணையம் பிறப்பித்த அரசு உத்தரவை தமிழக அரசு அமல் படுத்த முன் வர வேண்டும் என கூறி மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் ரமேஷ் பாண்டியன், தென் மண்டலச் செயலாளர் பேச்சுமணி பாண்டியன், மாவட்டத் தலைவர் மகாராஜா பாண்டியன், மாவட்ட அமைப்புச் செயலாளர் முருகன் பாண்டியன், மாவட்டத் துணைத் தலைவர் நடராஜபாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சூர்யா பாண்டியன், தோவாளை ஒன்றிய செயலாளர் முருகன், துணைத் தலைவர் கண்ணன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் மணி, மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் சுரேஷ், தோவாளை ஒன்றிய இளைஞரணி தலைவர் விக்னேஷ், மாவட்ட பொருளாளர் ஆபத்து காத்தான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு இந்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.