அரியலூர், ஜூன்:15
அரியலூர் அருகே சீரான குடிநீர் கேட்டு, காலிக் குடங்களுடன் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாலாஜா நகரம் ஊராட்சிக்கு உட்பட்ட காலனித் தெரு மக்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லையென்றும், அப்படியே குடிநீர் வழங்கினாலும், அது கலங்களாக வருவதாகக் குற்றச்சாட்டி அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த ஊராட்சித் தலைவர் மற்றும் காவல் துறையினர், சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தின் பேரின் அனைவரும் கலைந்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.