கிருஷ்ணகிரி,ஜுன்.30- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் பெண்டரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அரசம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பி.பி. சிவலிங்கம் இவரது மனைவி உமா ஜோதி உடல்நிலை குறைவால் இயற்கை மரணம் அடைந்தார், அவருடைய படத்திற்கு மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் துணை சபாநாயகருமான டாக்டர்.மு தம்பிதுரை படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மாவட்ட வணிகர் அணி செயலாளர் தூயமணி, முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் பிரபாகரன், கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிசாமி, கிழக்கு ஒன்றிய பொருளாளர் ராமன்,தி.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹரிவராசன், கவுன்சிலர் மாதன், காவேரிப்பட்டினம் ஒன்றிய முன்னாள் அவை தலைவர்கள் ஜெகதீசன் கிருபாநந்தன் உள்பட பலர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஊராட்சி மன்ற தலைவர் பி. பி. சிவலிங்கம் மனைவி மறைந்த உமா ஜோதி படம் திறப்பு விழா

Leave a comment