சுசீந்திரம்.ஏப்.30
புத்தளம் அருகே உள்ள சேதுபதியூர் பகுதியை சேர்ந்தவர் தீபாகரன் வயது 40, பெயிண்டர். இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கடன் வாங்கி உள்ளார். கடன் சுமை அதிகபட்டதால் மனவேதனையில் காணப்பட்டவரை மனைவி விஜயலெட்சுமி ஆறுதல் சொல்லி வந்ததாகவும், இந்நிலையில் மனைவி தன்னுடைய பிள்ளைகளுடன் அம்மா வீடான சுவாமியார்மடத்திற்குசென்றிருந்ததாகவும் இந்நிலையில் தீபாகரன் நேற்று முன்தினம் இரவு சேதுபதியூரில் உள்ள தன் வீட்டிற்கு வந்துள்ளார்.
மறுநாள் நேற்று காலை வெகு நேரம் ஆகியும் வீடு திறக்காததால் சந்தேகம் அடைந்த பக்கத்தில் உள்ளவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது தீபாகரன் வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் மனைவியின் புடவையால் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து காணப்பட்டார். இதுகுறித்து அவரது மனைவி விஜயலெட்சுமி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ், பொறுப்பு இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.