நீலகிரி. மார்ச். 30
ஏப்ரல் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வார நாட்கள் 6. ஆயிரம் வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8. ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென ஐகோர்ட் உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி கடந்த ஆண்டு மே மாதம் ஏழாம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ- பாஸ் முறை கட்டாயமென அறிவிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள், வணிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஊட்டி மார்கெட் பகுதியில் வணிகர்கள் கருஞ்சட்டையணிந்து கண்டனத்தை தெரிவித்தனர். கொண்டனர். இ- பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள்முதல் எண்ணிக்கை குறைந்துள்ளது. வணிகர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப.பட்டுள்ளனர் . எனவே இ. பாஸ் முறையை ரத்து செய்ய கோரியும், 13. அம்ச கோரிக்கையினை நிறைவேற்றக்கோரியிம் ஊட்டியில் கடைகளில் கருப்பு கொடி ஏற்றியும் கருஞ்சட்டையணிந்தும் கண்டனத்தை தெரிவித்தனர்.



