கோவை செப்:19
கோவை மாவட்டம் தடாகம் கேஎன்ஜி புதூரில் உள்ள அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்டில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வர்ண கோலப்போட்டிகள் மற்றும் ஓணம் சத்யா 26 வகையான உணவு தயாரிக்கும் போட்டிகள் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ரேடிசன்புளு HR ஒருங்கிணைப்பாளர் வினிதா சிறப்பு கலந்து கொண்டு கோலப்போட்டிகள் மற்றும் ஓணம் சத்யா விருந்து உணவு வகைகளை மதிப்பீடு செய்து வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்
இது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி சுரேஸ் குமார் கூறுகையில் உலகம் முழுவதும் ஹோட்டல் இண்டஸ்ட்ரீஸ் தொழிலில் அதிகளவிலான ஆட்கள் தேவைப்படுகிறார்கள் எனவே மாணவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை தேர்வு செய்து பயனடைய வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சிக்கான சிறப்பு ஏற்பாடுகளை அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் துணை முதல்வர் சத்யாஆனந்தன் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிடதக்கது இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்