திருப்பூர், மே. 11:
திருப்பூர் மாவட்ட வெல்டிங் மற்றும் கிரில் தயாரிப்பாளா்கள் நல சங்க ஆலோசனை கூட்டம், திருப்பூரில் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவா் குணசேகரன் தலைமை தாங்கி பேசினார். செயலாளா் சுதீஷ், பொருளாளா் ராமசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனா்.
இதில் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் சிமெண்ட், மணல், ஜல்லி உள்ளிட்ட பொருட்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. எனவே மூலப்பொருட்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று திருப்பூர் சிவில் இன்ஜினீயா்ஸ் அசோசியேஷன் வருகிற 12ம் தேதி கலெக்டா் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனா். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தொிவிப்பது.
எனவே இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துவது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



