குளச்சல், பிப்-5
பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் ஜோதி பிரகாஷ் (33). குளச்சலில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவ தினம் வேலைக்கு செல்வதற்காக தனது பைக்கில் புறப்பட்டு குளச்சலுக்கு வந்தார். ஆனைகுழி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் தெற்கு பகுதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் இரண்டு நாட்களுக்கு பிறகு வேலை முடிந்து மீண்டும் தனது பைக் எடுப்பதற்காக நேற்று வந்துள்ளார். ஆனால் அங்கிருந்த அவரது பைக்கை காணவில்லை. யாரோ மர்ம நர்கள் நைசாக பைக்கை திருடி விட்டு சென்றது தெரிய வந்தது.
இது குறித்து ஜோதி பிரகாஷ் குளச்சல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையாக வைத்து பைக்கை திரட்டிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.