கந்திலி:செப்:03, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட செவ்வாத்தூர் கிராமத்தை அடுத்த சாலூர் பகுதியில் பொது வழியினை தனி நபர் அக்கரமிப்பு செய்துள்ளதாகவும் அதனை மீட்டுத் தர கோரி அற்புதம் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: சாலூர் பகுதியில் பல ஆண்டு காலமாக பொது வழியாக பயன்படுத்தி வந்த வழி தடத்தை அதே பகுதியினைச் சேர்ந்த நடேசன் அவரது மனைவி செல்வி மற்றும் மகன் ஜெய்மாதவன் குடும்பத்தினர் பொது வழியை ஆக்கரமிப்பு செய்யப்பட்டதாகவும் , அந்த பகுதியில் உள்ள மணிகண்டன், சாமிக்கண்ணு, முருகேசன், சண்முகம், குமரேசன் ஆகிய குடும்பத்தினர்களும் அந்த வழியாகத்தான் விவசாய தேவைகளுக்கு சென்று வர வேண்டும். நான் பள்ளி குழந்தைகளும் தினமும் அந்த வழியாகத்தான் பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பத்திரத்தின் அடிப்படையில் புது வழி சென்று வர வழி பாக்கியம் உண்டு என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் இந்த வழியாக யாரும் செல்லக்கூடாது என்று மிரட்டி வருகிறார்கள் என்று மனதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி விசாரணை செய்யும்படி உத்தரவிட்டார்.