திண்டுக்கல் அருகே வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு கூட்டம்!
திண்டுக்கல் அம்மாபட்டி ஊராட்சி விராலிப்பட்டி கிராமத்தில் வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது . அமைதி அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ரேணுகாதேவி கருத்துரையிலும் தன்னார்வலர் சன்மதி ஒருங்கிணைப்பிலும் 20 வளரிளம் பெண்கள் கலந்து கொண்டார்கள். வளரிளம் பருவத்தில் பின்பற்றப்பட வேண்டிய உணவு முறைகள் குறித்தும் பழங்கள், கீரைகள், காய்கறிகள் உண்ண வேண்டிய அவசியம் மற்றும் அவற்றில் அடங்கியுள்ள சத்துக்கள் குறித்தும் விளக்கப்பட்டது. மேற்கண்ட கருத்துரையின் வாயிலாக கற்றுக்கொண்ட கருத்துக்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என வளர் இளம் பெண்கள் கருத்து கூறினார்கள் ..