தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் பெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதையெட்டி தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரம், அப்பாவு நகர் பகுதியில் மழை நீர், கழிவு நீர் வெளியேற்றப்படுவதையும், நகராட்சி அலுவலகம் அருகில் விழுந்துள்ள மரம் அப்புறப்படுத்தும் பணியையும், இலக்கியம்பட்டி ஊராட்சியில் உள்ள ஏரி நிரம்பி வருவதையும் ,கரை பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி அவர்கள் உத்தரவிட்டார். கூடுதலாச்சியர் கௌரவ்குமார், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மேலாண்மை இயக்குநர தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன சி.திவ்யதர்ஷினி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.



