சுசீந்திரம். மார்ச் .26
சுசீந்திரம் அருகே உள்ள தேரூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது இங்கு இருந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு தரை வழியாக பைப்பு மூலம் சுசிந்திரம் கன்னியாகுமாரி பகுதிகளுக்கு குடிநீர் செல்கிறது கடந்த 15 நாட்களுக்கு மேலாக தேரூரில் இருந்து சுசீந்திரம் செல்லும் சாலை அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகின்றது வெயில் காலத்தில் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் இது போல குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை உடனடியாக சரி செய்ய வேண்டுமெனவும் இதுபோல் வேறு எங்காவது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகின்றதா என அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கையாக குடிநீர் பைப்புகளை குடிநீர் வீணாகாமல் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் அதனை கடந்த 21 ஆம் தேதி தினத்தமிழ் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது அதனை அறிந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீர் வீணாகும் இடத்தை சரி செய்தனர் இந்த செய்தியை முதலில் வெளியிட்ட தினத்தமிழ் நாளிதழை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்



