சிவகங்கை மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மாநிலங்கள் உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.90.00 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உடற்குறைவு கட்டிடத்தினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி முன்னிலையில் மருத்துவமனையின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து புதிய கட்டிடத்தினை பார்வையிட்டனர் உடன் இணை இயக்குனர் (பொ) மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மரு.பிரியதர்ஷினி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.அருள்தாஸ் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி மாங்குடி ஆகியோர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



