இராமநாதபுரம் செப்.02-
ராமநாதபுரம் மாவட்டம் அதி.மு.க மண்டபம் மேற்கு ஒன்றியம் நிர்வாகிகள் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு கட்சியின் அடையாள அட்டை வழங்கும் வழங்கும் விழா ஒன்றிய செயலாளரும், மண்டபம் ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.ஜி.மருதுபாண்டியன் ஏற்பாட்டில் பட்டணம் காத்த னில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனிய சாமி தலைமை தாங்கினார். தொடர்ந்து மண்டபம் மேற்கு ஒன்றியம் 16 கிராம ஊராட்சிகளுக்குரிய 149 கிளை நிர்வா கிகளிடம் புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங் கினார் முன்னதாக அ.தி.மு.க உறுப்பினருக்கான புதிய வடிவில் உருவாக்கப்பட்ட அட்டையை மண்டபம்ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருதுபாண்டியனுக்கு வழங்கினார். விழாவில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பா ளர், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலர் ஆர்.ஜி.ரத் தினம், மாவட்ட இணை செயலர் கவிதா சசிகுமார். ஜெ.பேரவை மாவட்ட செயலர் சேது பாலசிங்கம் ஆகி யோர் பேசினர். இதில் மாவட்ட மகளிரணி செயலர் ஜெய் வானி சீனிக்கட்டி, மாவட்ட மருத்துவரணி செயலர் டாக டர் இளையராஜா, அமைப்பு சாரா அணி செயலர் பழனி முருகன் வழக்கறிஞரணி மாவட்ட செயலர் கருணாகரன், மாவட்ட ஜெ.பேரவை துணைச் செயலாளர் நாட்டுக் கோட்டை ஜெயகார்த்திகேயன், வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆர்.ஜி.ராமமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலர் நாகராஜன், ஒன்றிய ஜெ.பேரவை நிர்வாகி வழுதூர் வி.ஜி.பி.ஜெகன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செய லாளர்கள் வாலாந்தரவை ஜெயபால், பாரதி நகர் எஸ். தினகரன், ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சுமன் மற்றும் மண்டபம் மேற்கு ஒன்றிய கிளை திர்வாகிகள் பங்கேற்றனர் இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன் ஆலோசனையின் படி மாவட்ட மாணவரணி இணை செயலர் வினோத். மாவட்ட பிரதிநிதி பட்டணம்காத்தான் முருகேசன், ரோஸ் நகர் செயலாளர் கண்ணன், ராமநாதபுரம் நகர் துணை செயலாளர் ஆரிபு ராஜா மற்றும் பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டபம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் செய்திருந்தனர்.