திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பாக தென்னம்பட்டி அரசு பள்ளி 7 மாணவர்கள் , 14 மாணவிகள் என மொத்தம் 21 பேர்களை வேன் மூலம் திண்டுக்கல்லுக்கு அழைத்து வரப்பட்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், பட்டாசுகள், மாணவியர்களுக்கு அலங்காரப் பொருட்கள் என மொத்தம் ரூபாய் 55000 மதிப்பில் பொருட்களை ரோட்டேரியன் பி.ஏ.பி. நாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஹெச். புருசோத்தமன் தலைமை தாங்கினார். மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர்
பி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.