மதுரை ஜூலை 17,
மதுரை மாவட்டம் டாக்டர்.எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் வளாகத்தில் இருந்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பேருந்துகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, போக்குவரத்துறை அமைச்சர் எஸ்எஸ்.சிவசங்கர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து பேருந்தில் பயணித்தார்கள்.மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் (மதுரை மண்டலம்) ஆ.ஆறுமுகம் ஆகியோர் உடன் உள்ளனர்.