மயிலாடுதுறை அருகே வடகரை அரங்ககுடி பள்ளிவாசல் தெருவில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி தொடக்க விழா நடைபெற்றது. இதில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அமுர்த விஜயகுமார், அப்துல்மாலிக், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஹேப்பி அர்சத், மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன், உதவி செயற்பொறியாளர் கலியபெருமாள் மற்றும் ஜமாத்தார்கள், திமுகவினர் கலந்து கொண்டனர்.



