கிருஷ்ணகிரி,ஜன.22- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி ஊத்தங்கரை ஒன்றியத்தில் இருந்து 600 க்கு மேற்பட்ட அதிமுக பாமக பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள், ஊத்தங்கரை முன்னாள் ஒன்றிய குழு தலைவரும் ஒன்றிய கழக செயலாளர் மூன்றாம்பட்டி குமரேசன் தலைமையில் 600 க்கும் மேற்பட்டவர்கள் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கள் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதேபோல் கிருஷ்ணகிரியில் இருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் 600-க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர், எம் எல் ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் கதிரவன், திமுக பிரமுகர் அன்பரசு, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, தலைமைக் கழக பேச்சாளர் லயோலா ராஜசேகர், ஒன்றிய கழக செயலாளர்கள் கே.ஆர்.கே. நரசிம்மன், குணவசந்தரசு, ஆதிமகேந்திரன், தேங்காய் சுப்பிரமணி,ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயசந்திர பாண்டியன்,கார்த்திக், சூர்யா பிரகாஷ், சங்கீதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



