தஞ்சாவூர். ஏப்ரல். 5.
தஞ்சாவூர் மாவட்ட அளவில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் குறுகிய கால உண்டு உறைவிட பயிற்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். தொடக்க விழாவில் மாவட்டத்தில் நீட் தேர்வுவிற்கு விண்ணப்பித்த 430 மாணவர்களில் பள்ளிக் கல்வித்துறையால் விருப்பம் தெரிவித்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த 100 மாணவர்களுக்கு கட்டணமில்லா உண்டு மற்றும் தங்குமிட பயிற்சி அளிக்கப் படுகிறது.
நீட் குறுகிய கால பயிற்சியை திறம்பட மேற்கொள்ளும் பொருட்டு மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு மாணவ மாணவிகளுக்கு தேவையான கையேடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன் மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் ஒருங்கிணைந் த பள்ளி கல்வியின் மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ் குமார், தாசில்தார் சிவக்குமார், ஆதி திராவிட நலத்துறை தாசில்தார் சிவக்குமார் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர்கள் வினோத், ஜேக்கப், மாதவன், மாவட்ட நீட் ஒருங்கிணை ப்பாளர் அருள் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்



