மதுரை ஜனவரி 26,
மதுரையில் அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினவிழா
மதுரை மாவட்டம் கிழக்கு ஒன்றியத்தில் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். நிகழ்வில் தலைமை ஆசிரியர் தென்னவன் பேசியதாவது, இந்திய தேர்தல் ஆணையம் உருவான நாள் தேசிய வாக்காளர் தினமாக 2011 முதல் கொண்டாடப்படுகிறது. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும். புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல் முதலியன சிறப்பு முகாம்களில் நடைபெறும். எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பது நமது தாரக மந்திரமாக விளங்க வேண்டும். 2025 ஆம் ஆண்டின் கருப்பொருள் வாக்களிப்பது போல எதுவும் இல்லை நான் உறுதியாக வாக்களிப்பேன் என்பதாகும் என பேசினார். வாக்காளர் சேர்க்கை நீக்கல் படிவங்களில் மாதிரிகள் காண்பிக்கப்பட்டன. ஆசிரியை அருவகம் உறுதிமொழி வாசிக்க அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதிமொழி ஏற்றனர். வாக்காளர் தினம் சார்பாக வினாடி வினா நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார். விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.