ஜனவரி 29
தேசிய சாலை பாதுகாப்பு விழா திருப்பூர் மாவட்டம் அவிநாசி உட்கோட்டம் பொருமாநல்லூர் போக்குவரத்து காவல், பெருமாநல்லூர் ரோட்டரி சங்கம் மற்றும் திருப்பூர் தி ஐ பவுண்டேஷன் இணைந்து நடத்திய வாகன ஓட்டுநர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். பெருமாநல்லூர் போக்குவரத்து காவல் நிலையம் வளாகத்தில் நடைபெற்றது. இதில் ரோட்டாரி சங்க நிர்வாகிகள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் விழாவினை துவங்கி வைத்தனர். ரோட்டரி சங்க சார்பில் தலைவர் சரவணகுமார், செயலாளர் சசிகாந்த், பட்டய தலைவர் விஜயகுமார், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாவட்ட தலைவர் சிவானந்தவடிவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராமன், மண்டல ஒருங்கிணைப்பாளர் ரவீந்தரன், உதவி ஆளுநர்கள்.அசோகன்,சுரேஷ்,ஜனார்த்தனன்,கதிர்வேல் சம்பத்குமார், பெருமாநல்லூர் போக்குவரத்து ஆய்வாளர் திவாகரன் ,சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளர்
லோகநாதன்,
மற்றும் பலரக வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.