திருப்பூர் மாவட்டம் மே:27
கோவாவில் நடைபெற்ற தேசிய பேட்மிட்டன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் திருப்பூர் வீரர் கவியுகன் சாம்பியன் திருப்பூர் பேட்மிட்டன் அசோசியேஷன் செயலாளர் மோகன்குமார் பாராட்டி பரிசுகள் வழங்கினார். கோவாவில் தேசிய அளவிலான பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது. இதில் 15 வயதிற்கு உட்பட்டோர் இரட்டையர் கலப்பு பிரிவில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரண்ட்லைன் பள்ளி மாணவன் , பெருமாநல்லூர் லெஜன்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர் கவியுகன் , மதுரை அனுஷ்கா ஜெனீபர் இணைந்து தமிழகத்தின் சார்பாக விளையாடி தேசிய அளவில் சாம்பியன் பட்டத்தை வென்றார்கள் . தேசிய அளவில் சாம்பியன் பட்டம் என்ற கவியுகன் க்கு திருப்பூர் மாவட்ட பேட்மிட்டன் அசோசியன் சார்பில் செயலாளர் மோகன்குமார் வாழ்த்தி பேட்மிட்டன் கிட் பேக் வழங்கி பாராட்டினார். அருகில் லெஜெண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர்கள் ராஜா மற்றும் வெங்கடேசன் உள்ளார்கள்.