நாகர்கோவில், டிசம்பர் 6 –
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 69வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் சுரேஷ் ராஜன், மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அம்பேத்கர் பாசறை சார்பில் அதன் அமைப்பாளர் ஆசீர் மாலை அணிவித்தார். இதில் நிர்வாகிகள் சுகுமாரன், சாம்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்தனர். இதில் மாவட்ட தலைவர் கோபகுமார், எம்.ஆர். காந்தி எம்எல்ஏ, மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாநிலச் செயலாளர் மீனாதேவ், கவுன்சிலர்கள் ஐயப்பன், சுனில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான தளவாய் சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்தனர். முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.



