நாகர்கோவில், டிச. 8 –
நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் அண்ணா பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் நிலைய கழிவறை அருகே நின்ற வடசேரி அருகு விளை பகுதியை சேர்ந்த லிங்கம் என்ற சுயம்பு லிங்கம் (48) என்பவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார்.
சந்தேகத்தின் பேரில் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 10 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இவர் மீது வடசேரி காவல் நிலையத்தில் குற்றவாளிகள் சரித்திர பதிவேடு பட்டியலில் உள்ளதாக போலீசார் கூறினார்கள். மேல் இவர் வீட்டிலும் போலீசார் சோதனை செய்தனர். ஏற்கனவே போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் லிங்கத்தின் மீது வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


