நாகர்கோவில் ஜூன் 3
குமரி மாவட்டம் குளச்சல் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாவட்டத் தலைவர் ஆனறலின் சுஜித் தலைமையில் குளச்சல் மகளிர் பாசறை செயலாளர் அன்ஸி சோபா ராணி, மாநில இளைஞர் பாசறை செயலாளர் ஹிம்லர், குளச்சல் வடக்கு தொகுதி செயலாளர் அனந்தேஸ்வரன் நுள்ளி விலை ஊராட்சி செயலாளர்கள் டெலிக்ஸ், அசோக் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகா நுள்ளிவிளை ஊராட்சி மற்றும் கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் கண்டன்விளை, குசவன்குழி இலுப்பைவிளை இணைப்பு சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது.
இந்த சாலை செல்லும் வழியில் தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியும் அமைந்துள்ளது. மருத்துவமனைக்கு நோயாளிகள், பள்ளிச்குச செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்தச் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடிவிபத்துக்கள் ஏற்படுகின்றது. 6/08/2024 அன்று கன்டன் விளை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மனுநீதி நாளில் ஊர் பொதுமக்கள் சார்பாகவும் மனு கொடுத்தும் மாவட்ட ஆட்சியல் அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த சாலையை மாவட்ட ஆட்சியர் ஒருமுறை நேரில் பார்வையிட்டு இந்த சாலையை சீரமைத்து தருமாறு நாம்தமிழர் கட்சி சார்பாகவும்,பொதுமக்கள் சார்பிலும் கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
உடன் தமிழ் மீட்சி பாசறை செயலாளர் ஜார்ஜி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் கண்ணன், நாகர்கோவில் குருதி கொடை பாசறை செயலாளர் ஜான், சேகர்,சில்வர் ஸ்டார் மற்றும் பொறுப்பாளர்கள் ஜெபர்சன், அமல்ராஜ், அரசு ஆகியோர் இருந்தனர்.