வேலூர்_13
வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த அரியூர் வினோபா வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி மாத திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகமும், ஆராதனையும் ,கரகம் ஊர்வலமும் ,பம்பை வர்ணிப்பும் ,பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், அம்மன் தேர் வீதி உலாவும், வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நாட்டான்மை சுந்தர், பொருளாளர் பலராமன், செயலாளர் பூபதி, துணைத் தலைவர் சுப்பிரமணி, மற்றும் ஊர் பொதுமக்கள், விழா குழுவினர்கள், பக்தர்கள் ,பலர் கலந்து கொண்டனர்.



