கம்பம்.
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் புனித பனிமய அன்னை தேர் பாடல் மற்றும் புகழ் பாடல் இசை தட்டு வெளியீட்டு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. குறுந்தொட்டு வெளியிடுபவர் அருட் சகோதரர் சேவியர் தி. இ.ச.புனித அலோசியஸ் கலை மனைகளின் அதிபர், திரைப்படப் புகழ் இசை அமைப்பாளர் இசை சாரல் சீர்மிகு ஷாம் C.S.அவர்கள் பாடியவர்கள் தேர் பாடல் டாக்டர் நாராயணன், புகழ் பாடல், சைந்தவி, பாடல் இயக்கம் புலவர் நல்லாசிரியர் வே. அ.சேவியர் பீட்டர் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி ராயப்பன்பட்டி, இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் ஸ்டான்லி ஜாய், வினை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய நிக்ஸன், இசைத் தட்டு பெறுபவர்கள் அருட்தந்தை ஞானபிரகாசம் பங்குத்தந்தை ராயப்பன்பட்டி, அருட்பணி ஆல்பர்ட் ஜோசப் இயேசு சபை பாளையங்கோட்டை, ஆனந்த் மதுரை,பிரபாகர் கிராம கமிட்டி தலைவர் ராயப்பன்பட்டி, அந்தோணி ராஜ் கிராம கமிட்டி இணை தலைவர் ராயப்பன்பட்டி,நினைவு பரிசு பெறுபவர் இசையமைப்பாளர் சாம் C.S. அவர்களின் தந்தை சார்லஸ் ஆகியோர் நினைவு பரிசும் விருதுகளும் பெற்றனர். இதில் கிராம கமிட்டி அன்பியங்கள்,இளையோர் இயக்கம்,பக்த சபைகள்,பங்கு இறைமக்கள்,சமூக ஆர்வலர்கள் இருபால் ஆசிரியர் பெருமக்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.