சங்கரன்கோவில் நகராட்சியில் நகர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்திட அரசு மானியம் வழங்க வேண்டி தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவின் தலைவர் காந்தி ராஜனிடம் நகர்மன்ற சேர்மன் உமா மகேஸ்வரி கோரிக்கை மனு அளித்தார் அதில் நகர் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் நகராட்சி வருவாய் பெருக்க திருமண மண்டபங்கள் ராஜபாளையம் செல்லும் சாலை திருவேங்கடம் சாலை பகுதியில் கடைகள் கட்டுதல் நகராட்சி இடத்தில் மெகா வாட் திறனில் சூரிய ஒளி மின் சக்தி நிலையம் அமைத்தல் வடிகால் இல்லாத பகுதிகளில் நகர் முழுவதும் வடிகால் வசதி ஏற்படுத்துதல் ஒருங்கிணைந்த மாநாட்டு அரங்கம் அமைத்தல் ஊர் குளங்களை தூர்வாருதல் படகு குளம் அமைத்தல் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு குளோரின் நீரேற்றம் இயந்திரம் அமைத்தல் தினசரி மார்க்கெட் காம்பௌண்ட் சுவர் அமைத்தல் உள்பட பல்வேறு முக்கிய பணிகளுக்கு அரசு மானியம் வழங்கும்படி கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்ற மதிப்பீட்டு குழுவின் தலைவர் காந்தி ராஜன் எம் எல் ஏ தலைமையிலான குழுவினரிடம் நகர்மன்ற சேர்மன் மகேஸ்வரி மனு அளித்தார் நகராட்சி கமிஷனர் சபாநாயகம் உடனி ருந்தா ர்.



