கன்னியாகுமரி மார்ச் 17
முத்தமிழ் விழா, நுண்கலை மன்ற விழா, கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என நாற்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு விழா பேரூரையாற்றி நல்ல முறையில் பணியாற்றிய துறையில் ஆசிரியர்கள் மற்றும் சிறந்த மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
முன்னதாக வருகை தந்த விஜய் வசந்த்தை கல்லூரி முதல்வர் சரோஜா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு சால்வை அணிவித்து கவுரவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், வட்டாரத் தலைவர் சாம் சுரேஸ் குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அருண், திபாகர், கிங்ஸிலின் உட்பட பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டனர்.



