நாகர்கோவில் அக் 11
குமரி மாவட்டம் குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட சிங்கங்காவு பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் விதிமுறைகளை பின்பற்றாமல் பேக்கரி பண்டங்கள் உற்பத்தி செய்யும் நோக்கில் பேக்டரி துவங்குவதற்கான பணிகள் நடைபெறுகிறது. எனவே இப்பகுதியில் பேக்கரி அமைந்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகை கார்பன் போன்றவைகள் பேக்கரியில் இருந்து வெளியாகி சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் ஆகவே பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாத்திட அரசு அனுமதி பெறாமல் நடைபெறும் பேக்கரிக்கு தடை விதிக்க கோரி சி பி ஐ எம் எல் சார்பில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்டத் தலைவர் கார்மல் தலைமையில்
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாக :-
குமரி மாவட்டம் குளச்சல் நகராட்சியில் சிங்கங்காவு பகுதியில் பேக்கரி பண்டங்கள் உற்பத்தி செய்யும் பேக்டரி துவங்கிடபணிகள் நடைபெற்று வருகிறது. உரிய விதிமுறைகள் எதுவுமே பின்பற்றப்படாமல், சுகாதாரக்கேடை உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.மக்கள் குடியிருப்பு பகுதியில் சுகாதாரத்தை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு பேக்கரி அமைவதால்
பேக்கரி பண்டங்கள் பெருமளவிற்கு உற்பத்தி செய்வதற்கு விறகுகள், முந்திரி பருப்பு தோடு பயன்படுத்துவார்கள். இதனால் பெரும் புகை-கார்பன் வெளியாகும். இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் சுவாச பிரச்சனை உருவாகும் அபாயம் உள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும், கம்பெனி விதிமுறைகளையும் பின்பற்றாமல் செயல்படும் சட்டவிரோத கம்பெனியை துவங்கிடாமல் தடுத்திடுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.



