கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்தில்
ஆதார் திருத்தம் செய்யும் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 186 கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ஆதார் திருத்தம் செய்ய பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 300 க்கும் மேற்பட்டோர் கூடியதால் அசாதாரணமான சூழல் ஏற்பட்டது.
தினந்தோறும் 50 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கிய நிலையில் திடீரென 300 க்கும் மேற்பட்டோர் கூடியதால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனடையே கூடுதலாக ஆதார் மையம் அமைக்க கோரி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



