By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு

Last updated: January 9, 2025 12:48 pm
January 9, 2025
45 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி வட்டம், காவேரிப்பட்டிணம் தரப்பு, பெண்ணேஸ்வரமடம் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மின்சாரத்துறை, கூட்டுறவுத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட துறைகள் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவது குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக எடுத்துரைத்தனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி அத்திட்டங்கள் மூலம் பொதுமக்கள் எவ்வாறு பயனடைய முடியும் என்பதை நேரடியாக துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளிக்கும் வகையில் இம்மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாதந்தோறும் நடத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி அரசின் திட்டங்கள் மூலம் பயன்பெறும் வகையில் தங்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு அருகிலேயே கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு மக்களுடன் முதல்வர், உங்களைத் தேடி உங்கள் ஊரில் உள்ளிட்ட பல்வேறு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, அடுத்த மாதத்திலிருந்து மீண்டும் மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இம்முகாம்களில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

பெற்றோர்கள் கல்வி கற்க குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் தான் கல்வி கற்று நல்ல வேலைக்கு சென்று அவர்களையும், குடும்பங்களையும், சமுதாயத்தையும் உயர்த்த முடியும். ஆண், பெண் என்று பாகுபாடில்லாமல் சமமாக கல்வி வழங்க வேண்டும். தங்களதுகுழந்தைகளை இரண்டரை வயது முதலே அங்கன்வாடி மையங்களில் சேர்க்க வேண்டும். அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளை மாதந்தோறும் எடை மற்றும் உயரம் ஆகியவற்றை சரிபார்க்கப்பட்டு, எடை மற்றும் உயரம் குறைவாக உள்ள குழந்தைகளை கண்டறிந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். மேலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகளை கொடுப்பதனால் அவர்கள் வளர வளர படிப்பு, விளையாட்டு ஆகியவற்றில் சிறந்தவர்களாக உருவாக்க முடியும். அதேப்போல் குழந்தையின் முதல் 1000 நாட்கள் முக்கியமான நாட்களாகும். அந்நாட்களில் தாய்ப்பால் மற்றும் சரியான உணவு கொடுப்பது முக்கியமாகும். மேலும், மருத்துவர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கூறும் ஆலோசனையை சரியான முறையில் கடைபிடிப்பதனால், நல்ல உடல் ஆரோக்கியமான குழந்தைகளை வளர்க்க முடியும்.

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு காலை உணவு, மதிய உணவு, முட்டை, விலையில்லா சீருடை, பாட புத்தகங்கள், விலையில்லா மிதிவண்டிகள் உயர்கல்வி பயில மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையும், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தங்கள் குழந்தைகளை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும். மேலும், பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் பட்சத்தில் குழந்தைகளை வீட்டிலுள்ள தாத்தா, பாட்டி பாதுகாக்க வேண்டும்.

ஒரு பெண் கரு உண்டாகி அந்த கரு ஆணா? பெண்ணா? என்று ஸ்கேன் செய்து தெரிந்துக்கொள்வது குற்றமாகும். இது போன்ற செயல்களில் ஈடுப்படுவோர் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், இளம்வயது திருமணத்தை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நமது மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேப்போல் பொதுமக்களும் இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் போது சீட்பெல்ட் போட வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, 1 பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகள் நாளை (09.01.2025) முதல் வழங்கப்பட உள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் தங்களுக்குரிய நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் தெரிவித்தார்.தொடர்ந்து, மக்கள் தொடர்பு திட்ட முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், வருவாய்த்துறை சார்பாக 41 பயனாளிகளுக்கு ரூ.41 இலட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா ஆணைகளும், 16 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான சான்றுகளும், 2 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டாக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பாக 15 பயனாளிகளுக்கு ரூ.3 இலட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையும், மாவட்ட வழங்கல் துறை சார்பாக, 50 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், தோட்டக்கலைத்துறை சார்பாக 3 பயனாளிகளுக்கு ரூ.31 ஆயிரத்து 340 மதிப்பில் தளவாடப்பொருட்களும், வேளாண்மைத்துறை சார்பாக, 7 பயனாளிகளுக்கு ரூ.48ஆயிரத்து 538 மதிப்பில் துத்தநாக சல்பேட், மண்புழு உர படுக்கை, சுழல்கலப்பை, விசைத்தெளிப்பான் உள்ளிட்ட தளவாடப் பொருட்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக, 17 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 6 ஆயிரத்து 700 மதிப்பில் சலவை பெட்டிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு ரூ.22,890 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்கள் என மொத்தம் 153 பயனாளிகளுக்கு ரூ.46 இலட்சத்து 86 ஆயிரத்து 468 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகள் மற்றும் டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) .சி.பன்னீர்செல்வம், மாவட்ட வழங்கல் அலுவலர் .கீதா ராணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் .ரமேஷ்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் .ஜெயந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் .பத்மலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .முருகேசன், மாவட்ட பொது மேலாளர் (தாட்கோ) .வேல்முருகன், உதவி இயக்குநர் (வேளாண்மை) .முனிகிருஷ்ணன், வட்டாட்சியர் .வளர்மதி, தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) .மகேஸ்வரி, மண்டல துணை வட்டாட்சியர் .கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .சுப்ரமணி, .சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள் .பூபதி, .சித்திக், .வினோத், மதி.ரம்யா, .திருவரங்கன், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வைகை அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கான தண்ணீர்
குமரி மாவட்ட அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஆதார் சேவை
நீதிமன்ற வளாகத்தின் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் கடத்தல் முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திருப்பதிசாரம் டோல்கேட்டில் தகராறு – குமரி விசிக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு

June 16, 2025
59 Views
மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புக்கள் தானம்
சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திறந்த வெளி கலையரங்கம்
25 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்
கூட்டுறவு ஊழியர்களுக்கு பணிக்கொடை; கலெக்டரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account