மயிலாடுதுறையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எம் எல் ஏ ராஜ்குமார் அங்கன்வாடி கட்டிடம் அமைப்பதற்கான அடிக்களை நாட்டினார்.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 22 வது வார்டு குரு ஞானசம்பந்தர் நகரில்அங்கன்வாடி அமைக்க வேண்டும்
என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனிடையே
அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. முன்னதாக நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று எம் எல் ஏ ராஜ்குமார் அங்கன்வாடி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் செல்வராஜ் நகர மன்ற துணைத் தலைவர் குமார் நகர மன்ற உறுப்பினர்கள் உஷாராணி,ரிஷிகுமார் , செந்தில்குமார், மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.