மயிலாடுதுறை.23
பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை எம்எல்ஏ நிவேதா முருகன் நேரில் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. இவற்றில் பெரும்பாலான இடங்கள் நெற்பயிர்கள் கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி பெய்த கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டுள்ள சுமார் 70 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் வயலில் சாய்ந்தன. நான்கு நாட்களுக்கு மேலாக நீரில் மிதப்பதால், பயிர்கள் அழுகியும், துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஒருசில இடங்களில் நெற்கதிர்கள் முளைக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களை பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ நிவேதா முருகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காட்டுச்சேரி, தில்லையாடி, திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர், கிள்ளியூர், விசலூர், திருவிளையாட்டம், பெரம்பூர், சேத்தூர், உக்கடை, எடக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆய்வு செய்த எம்எல்ஏவிடம் விவசாயிகள் அழுகிய பயிர்களை காண்பித்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். இந்த ஆய்வின் போது வேளாண் துறை அதிகாரிகள் திமுக ஒன்றிய செயலாளர்கள் அமுர்த.விஜயகுமார், மங்கை.சங்கர், அன்பழகன், மாலிக் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் உடன் இருந்தனர் .