By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆடி முதல் செவ்வாய் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆடி முதல் செவ்வாய் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை
கனஂனியாகுமரி

ஆடி முதல் செவ்வாய் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

Last updated: July 23, 2025 11:03 am
July 23, 2025
56 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 23 –

ஆடி முதல் செவ்வாய் என்பதால் அம்மன் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. முப்பந்தல், தாழக்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் அம்மன் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். தெய்வ அருள், பித்ருக்கள் அருள் பெற வேண்டி வழிபாடுகள் நடத்தப்படும் மாதம் என்பதால் இந்த மாதம் சுப காரியங்கள் இந்துக்கள் வீடுகளில் நடத்தப்படுவது இல்லை. ஆடி மாதத்தில் ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடி பௌர்ணமி, ஆடிப்பூரம், வரலட்சுமி விரதம் உள்ளிட்ட நாட்கள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதே போல் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளும் விசேஷமாகும்.

குமரி மாவட்டத்தில் ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கும். அதன்படி 22ம் தேதி ஆடி முதல் செவ்வாய் ஆகும். இதையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், தாழக்குடி அவ்வையாரம்மன் கோவில், நாகர்கோவில் நடுகாட்டி இசக்கி அம்மன் கோயில், சுசீந்திரம் முன்னு தித்த நங்கை அம்மன் கோயில், முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில், ஆலமூடு இசக்கியம்மன் கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், வடசேரி காமாட்சி அம்மன் கோயில், கிருஷ்ணன் கோயில் காமாட்சி அம்மன் கோயில், ஆதிபராசக்தி கோயில்கள், முத்தாரம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

பெண்கள் கூல் வைத்தும், கொழுக்கட்டை தயார் செய்து படைத்தும் அம்மனுக்கு வழிபாடு நடத்துகின்றனர். தாழக்குடியில் உள்ள அவ்வையார் அம்மன் கோயிலில் பெண்கள் கொழுக்கட்டை படைத்து வழிபாடு நடத்துவார்கள். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வந்து வழிபாடு செய்வார்கள். இதே போல் முப்பந்தலில் உள்ள இசக்கியம்மன் கோயிலுக்கும் ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். இதனால் தாழக்குடி மற்றும் முப்பந்தல் கோயில்களுக்கு சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட திட்டக்குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமையில்
காவலர்களுக்கான “மகிழ்ச்சி” வகுப்பு
இரவில் மளிகை கடைக்காரரை வெட்டி கொலை; பைக்கில் வந்த 2 பேருக்கு போலீஸ் வலை
தக்கலை அருகே பெண்ணின் தங்க கொலுசு திருட்டு
செல்பி பாயிண்ட் சரி செய்யப்படுமா?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திமுக நிலக்கோட்டை தொகுதி பூத்கமிட்டிக் கூட்டம்

April 7, 2025
59 Views
பொது சுகாதார த்துறை செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை
முதல் கட்ட கலந்தாய்வு 26 மாணவர்கள் சேர்க்கை!!
நித்திரவிளையில் தங்கையிடம் பிரச்சனை செய்ததை தட்டிக் கேட்ட அண்ணன் மீது தாக்குதல்
மதுரையில் பிரசித்தி பெற்று வரும்கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account