மார்த்தாண்டம், நவ- 25
குழித்துறை பகுதியை சேர்ந்தவர் விஜி. மிக ஏழையான இவர் வீடு இல்லாமல் அவதிப்பட்டார். இதையடுத்து அப்பகுதி பைரவர் காவு சேவா டிரஸ்ட் சார்பில் விஜிக்காக ரூபாய் 7 லட்சத்தில் வீடு அமைக்கும் பணி நடைபெற்று, அந்த வீட்டு சாவியை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
நாகர்கோவில் எம் எல் எ, எம் ஆர் காந்தி வீட்டிற்க்கான சாவியை வழங்கினார். நிகழ்ச்சியில் பைரவர் காவு சேவா டிரஸ்ட் தலைவர் விஜு , கவுன்சிலர் ரத்தினமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.