தருமபுரி மே. 12
தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட கரும்பு விவசாய சங்கத்தினர்களின் கரும்பு நடவு வயல்களை சுற்றுலாத்துறை மற்றும் சக்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு செய்தார்.
அப்போது கரும்பு சாகுபடியில் வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநிலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொட்டுநீர் பாசனம், தொழில்நுட்பங்கள் குறித்தும்,கரும்பு சாகுபடி குறித்தும்கேட்டறிந்தார். பின்னர் கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் விரிவாக்கம் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். இது குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
ஆய்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் சர்க்கரைத் திறை இயக்குனர் அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதை தொடர்ந்து பாலக்கோட்டின் உள்ள மாவட்ட கூட்டுறவு சக்கரை ஆலையின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்த அமைச்சர் கரும்பு விவசாயிகளுடன் கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்த கூட்டங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர்கள் பிரியா, ரவி, முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி, பேரூராட்சித் தலைவர் கள் இந்திராணி தனபால், முரளி உள்பட அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.