கோத்தகிரி மேட்டுப்பாளையம் பிரதான சாலை தட்ட பள்ளம் பகுதியில் சாலை ஓரம் தடுப்புச் சுவர் இடிந்து அபாயகரமான நிலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்திற்கு பேர் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்து வருகிறது கேரளாவில் போன்று கோத்தகிரி சாலையிலும் வயநாடு போல 300 அடிக்கும் மேலாக மண் சரிவு ஏற்பட்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது இதில் தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற வருகின்றனர் மேட்டுப்பாளையம் கோத்தகிரி செல்ல பிரதான சாலையாக இருப்பதால் இப்பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் நெடுஞ்சாலை துறையால் செய்யப்பட்டு வருகிறது மேலும் இதில் அதிக பாரங்களுடன் வரும் வாகனங்களை தவிர்த்தால் மேலும் அதிர்வினால் சாலை சரிவை காப்பாற்றலாம் என சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



