தூத்துக்குடி மாநகராட்சியில் கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தி பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம் என தெற்கு மண்டல குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் (புதன்கிழமை) வாராந்திர மண்டல அளவிலான குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி தெற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன், முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மேயர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டாா். பின்னர் அவர் பேசுகையில் “மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு பல்வேறு தரப்பு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக இணைப்புகள் வழங்கப்படுகிறது. அதே போல் பாதாள சாக்கடை திட்டம் முறைப்படுத்தி செயல்படுத்தப்படுகிறது. கடந்த காலத்தில் தெற்கு மண்டலம் பகுதிக்குட்டபட்ட 15 வார்டு பகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் இருந்தன.
தற்போது முதலமைச்சாின் உத்தரவிற்கிணங்க கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தி பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம். 80 சதவீதம் முழுமையான பணிகளை மேற்கொண்டுள்ளோம். மழை நீர் தேங்கும் பகுதியில் புதிய கால்வாய் பணிகள் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறு குறு பகுதிகளிலும் கணக்கெடுக்கப்பட்டு பேவர் பிளாக் தார்சாலை அமைக்கப்படும். வளர்ந்து வரும் பகுதிக்கேற்ப வளர்ச்சி பணிகளும் நடைபெறுகின்றன. அதிகாாிகள் உள்பட ஊழியர்கள் அனைவருடைய ஓத்துழைப்போடு பொதுமக்கள் நலன் கருதி பணியாற்றுகிறோம் என்று பேசினாா் என்றார்.
நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், இணை ஆணையர் சரவணக்குமாா், உதவி பொறியாளர் சரவணன், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர் காந்திமதி, மண்டல மேற்பார்வையாளர் குருவையா, நகா்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, இளநிலை பொறியாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் கண்ணன், ராஜபாண்டி, குழாய் ஆய்வாளர் நிக்சன், வருவாய் அலுவலர் ஆறுமுகம், கவுன்சிலா்கள் சரவணக்குமார், வெற்றிசெல்வன், பட்சிராஜ், ராஜேந்திரன், முத்துவேல், வைதேகி, ராஜதுரை, விஜயகுமாா், வட்டச்செயலாளர்கள் பிரசாந்த், நடேசன் டேனியல், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.



