செங்கோட்டையில் அதிமுக சார்பில் கனிம வளக் கொள்ளையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக தினந்தோறும் கேரளாவிற்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டு செல்லும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தென்காசி மாவட்ட அஇஅதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான
கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்தில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன கண்டன ஆர்ப்பாட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ,முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிராபகரன்,குற்றாலம் சேர்மன் கணேஷ் தாமோதரன் ,தென்காசி நகர செயலாளர் சுடலை, பொய்கை மாரியப்பன் மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அஇஅதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்