By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைத்து தனியார் பள்ளிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > அனைத்து தனியார் பள்ளிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு
தேனிமாவட்டம்

அனைத்து தனியார் பள்ளிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு

Last updated: May 17, 2024 11:38 am
May 17, 2024
197 Views
Share
SHARE

தேனி மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளில் உள்ள வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா,, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஆர்.சிவபிரசாத், முன்னிலையில் இன்று (16.05.2024) தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.

தேனி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, தீயணைப்புத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து தேனி வட்டார அலுவலகத்திற்குட்பட்ட தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஏற்றி செல்லும் 427 பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் பணிகள் இன்று நடைபெற்றது.

இந்த ஆய்வின்போது, பள்ளி வாகனத்தில் அவசர கால வழி, முதலுதவிப்பெட்டி, ஏறி இறங்கும் படிகட்டுகள், தீயணைப்பான் கருவி, வாகனத்தின் தரை பலகை, கண்காணிப்பு கேமிரா உள்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகியன முறையாக உள்ளதா என்றும் மேலும், வேக கட்டுப்பட்டுக்கருவி வாகனத்தின் பிரேக்கின் திறன் போன்றவை ஆய்வு மெற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பள்ளி வாகன ஓட்டுநர்களிடம் தெரிவித்ததாவது,
ஆண்டுக்கு ஒருமுறை பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்களை கூட்டாய்வு மூலம் ஆய்வு செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் உத்தரவிட்டதன் அடிப்படையில், இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. பள்ளி வாகன ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும். பயணத்தின்போது கட்டாயம் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தின் பின்புறம் பள்ளி நிர்வாகத்தின் தொலைப்பேசி எண், வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தின் தொலைப்பேசி எண், காவல் நிலைய தொலைப்பேசி எண், குழந்தைகள் பாதுகாப்பு எண் நன்றாக தெரியும் வகையில் கட்டாயம் எழுதப்பட வேண்டும்.

ஒரு வாகனத்தின் திறன் எவ்வாறு முழுமையாக உள்ளதோ அதேபோன்று வாகன ஓட்டுநர்களும் முழுமையாக இருக்க வேண்டும். முறையாக மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு விதித்துள்ள வழிமுறைகளையும், சாலை பாதுகாப்பு விதிகளையும், முறையாக பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வதால் வாகனங்கள் இயக்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சுகாதாரத்துறையின் மூலம் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண் பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவரின் அறிவுரையை பின்பற்றி முறையாக மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசின் மூலம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி வாகன ஓட்டுநர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒருமுறை மட்டும் பரிசோதனை மேற்கொண்டால், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், போன்ற நோய்களுக்கு தங்களது இருப்பிடத்திலேயே மருந்து, மாத்திரைகளை பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோன்று, தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யாத வாகன ஓட்டுநர்கள் பதிவு செய்வதற்கும், பதிவை புதிப்பிப்பதற்கும் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை பள்ளி வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மிகவும் பாதுகாப்பாக பள்ளி வாகனத்தை இயக்கிய 10 பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு தீ விபத்து மற்றும் மீட்பு முறை குறித்து மாவட்ட தீயணைப்புத்துறையின் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட 283 பள்ளி வாகனங்கள் வருகின்ற 21.05.2024 அன்று கூட்டாய்வு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.சிங்காரவேல், மாவட்ட தீயணைப்பு அலுவலர் .சந்திர குமார், தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் .கோவிந்தன், மோட்டார் வாகன ஆய்வாளர் .மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தலைவர் செல்வப் பெருந்தகை பத்திரிகையாளர் சந்திப்பு
சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கம்
கஞ்சா விற்ற மூன்று வாலிபர்கள் சுசீந்திரம் காவல்துறையினரால் கைது
பொய்யாக திருட்டு பட்டம் சுமத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; எஸ்பியிடம் மனு
கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை உணவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

அரசு உயர்நிலைப் பள்ளியில் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்

July 22, 2024
179 Views
மதுரை அவனியாபுரத்தில் அருணகிரி சுவாமிகள் ஆலய மகா கும்பாபிஷேகம்
காசநோய் இல்லா தமிழ்நாடு – 100 நாட்கள் விழிப்புணர்வு
குமரி அரசு மருத்துவ கல்லூரியில் உலக இரத்த கொடையாளர் தின விழா: கலெக்டர் பங்கேற்பு
மைதானத்தில் நடைபெற்ற 11-வது புத்தகத் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account