By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடற்படையின் அதி உச்சப் படை பிரிவான மார்க்கோஸ் கமாண்டோ பாதுகாப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடற்படையின் அதி உச்சப் படை பிரிவான மார்க்கோஸ் கமாண்டோ பாதுகாப்பு
கனஂனியாகுமரிதேசியம்மாவட்டம்

கடற்படையின் அதி உச்சப் படை பிரிவான மார்க்கோஸ் கமாண்டோ பாதுகாப்பு

Last updated: June 1, 2024 10:55 pm
June 1, 2024 94 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 31 

 

கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி இந்திய கடற்படையின் அதி உச்சமான கமாண்டோ படையான மார்க்கோஸ் படை வீரர்கள் – முதலை வீரர்கள் 30 பேர் பாதுகாப்புடன் தியானம் மேற்கொள்ள இருக்கிறார்.லோக்சபா தேர்தல் இறுதி கட்ட வாக்குப் பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் ஓய்வடைந்த  நிலையில் லோக்சபா தேர்தல் அனைத்து கட்ட வாக்குப் பதிவுகளும் நிறைவடைந்து ஜூன் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர்  தமிழ்நாடுக்கு வந்துள்ளனர். பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நடுக்கடலில் உள்ள விவேகானந்தர் பாறையில் மொத்தம் 45 மணிநேரம் தவமிருக்கிறார். விவேகானந்தர் தவமிருந்ததைப் போல தியானம் மேற்கொள்கிறார் மோடி. அமித்ஷா மதுரை உள்ளிட்ட இடங்களில் ஆலய தரிசனம் மேற்கொள்கிறார்.பிரதமர் மோடி, கன்னியாகுமரி நடுக்கடலில் தியானம் மேற்கொள்ளும் நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு போலீசாரைப் பொறுத்தவரையில் இது முதல் அனுவபமாக இருக்கிறது. பொதுவாக டெல்லியில் இருந்து வரும் தலைவர்கள் சென்னை, மதுரை, ஊட்டி என பல இடங்களில் தங்குவது வழக்கம். ஆனால் முக்கிய தலைவர் ஒருவர் 3 நாட்கள் நடுக்கடலில் தவம் அல்லது தியானம் மேற்கொள்வதும் அவருக்கு நடுக்கடலில் பாதுகாப்பு தருவது என்பதும் தமிழ்நாடு போலீசாருக்கு முதல் அனுபவமாகவே இருக்கிறது. இதனால் தரை, வான் மற்றும் கடற்பரப்பு என 3 பகுதிகளிலுமே கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது தமிழ்நாடு போலீஸ்.இதனிடையே பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக இந்திய கடற்படையின் அதி உச்சப் படை பிரிவான மார்க்கோஸ் கமாண்டோ படை வீரர்களும் கன்னியாகுமரி வருகை தந்துள்ளனர் . அதென்ன மார்க்கோஸ் கமாண்டோ படை வீரர்கள் என்கிறீர்களா? இந்திய கடற்படையின் “Marine Commandos” என்ற படைப்பிரிவு வீரர்கள்தான் மார்க்கோஸ் படையணி என அழைக்கப்படுகிறது. இந்தப் படைப் பிரிவு வீரர்கள் கடல்சார் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றுகிறவர்கள்.1987-ம் ஆண்டுதான் இந்திய கடற்படையில் மார்க்கோஸ் படைப் பிரிவு உருவாக்கப்பட்டது. தரை, வான், நீர்வழிகளில் யுத்தம் செய்யும் வல்லமை படைத்தது இந்த படையணி. நீர் வழி என்றால் வெறும் கடல் மட்டுமல்ல.. ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் பெருவெள்ளத்தோடு பாய்ந்தோடும் சீற்றம் கொண்ட ஆறுகளிலும் நின்றும் பயணித்தும் பயங்கரவாதிகளை அழித்தொழிக்கும் வலிமை பெற்ற படைப் பிரிவு வீரர்கள் இவர்கள். ஆதலால்தான் “முதலை வீரர்கள்” என்றும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர். கார்கில் யுத்தம் மற்றும் மும்பையில் பயங்கரவாதிகள் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்திய போதும் மார்க்கோஸ் படைப் பிரிவு வீரர்கள் களமிறங்கி தேசம் காத்தனர்.தற்போது நடுக்கடலில் தியானம் இருக்கப் போகும் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக மார்க்கோஸ் படைப் பிரிவு வீரர்கள் 30 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். மோடியின் பாதுகாப்புக்கான 3-வது அடுக்கில் கடற்படை வீரர்கள் இணைந்துள்ளனர். இதில்தான் மார்க்கோஸ் கமாண்டோ படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் பயணத்தால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கன்னியாகுமரியில் உள்ள பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

You Might Also Like

திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா மற்றும் பணியேற்பு விழா

ஜி.டி.என். இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக்கல்வி ஒருநாள் இலவச நீரிழிவு மருத்துவ விழிப்புணர்வு முகாம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP பிறந்தநாள் விழா

தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திண்டுக்கல்மாவட்டம்

புனித லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா

December 23, 2024 16 Views
மண்ணிவாக்கத்தில் கல்லூரி பட்டமளிப்பு விழா
ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை கூட்டம்
எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?