தென்தாமரைகுளம், ஜன.02- இடையன்விளை சக்தி கிராமம் ஊர் மன்னராஜா கோவில் கொடை விழா இன்று2-ம்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 4-ந் தேதி (சனிக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது. முதல்நாள் விழாவானஇன்று இரவு 7 மணிக்கு திருவிளக்கேற்றுதல், 8 மணிக்கு இசக்கி அம்மன் சிலைகள் பிரதிஷ்டை செய்தல், 9 மணிக்கு சாஸ்தா கதை வில்லிசை, 10 மணிக்கு தீபாராதனை, 11 மணிக்கு குருசாமி கதை வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
இரண்டாம்நாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு பத்திர காளி அம்மன் கதை வில்லிசை, 10 மணிக்கு தீபாராதனை, 11 மணிக்கு மன்னராஜா கதை வில்லிசை, நண்பகல் 1 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு மன்னராஜா கதை வில்லிசை,இரவு 8 மணிக்கு தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு நடுஇரவு பூஜை போன்றவை நடைபெறும்.
3-ம் நாளான 4-ந் தேதி(சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அமுது படைத்தல், 5 மணிக்கு விழா நிறைவு, காலை 7 மணிக்கு மாபெரும் சமபந்தி விருந்து ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இடையன்விளை சக்தி கிராமம் ஊர் மன்னராஜா கோவில் அறங்காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.